உட்கார்ந்து கொண்டே பணிபுரிபவரா நீங்கள்? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கும்.! - Seithipunal
Seithipunal


இன்றைக்கு பலரும் விரும்புவது உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதுதான். வெயிலிலும், மண்ணிலும் வேலை செய்வதை கௌரவக் குறைவாக கருதுகின்றனர். 

ஒரே இடத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்ந்து இருப்பவர்கள், வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்களை காட்டிலும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று நம்மில் பலருக்கு தெரியாது. 

அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தும், அதே சமயம் வீட்டிற்கு சென்று அமர்ந்தப்படியே டி.வி. பார்ப்பவர்களுக்கு பலவகையான நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இங்கு காண்போம். 

முதுகுவலி :

நம்மில் பல பேருக்கு முதுகுவலி என்பது மிகவும் தொந்தரவு கொடுக்கக்கூடிய ஒன்று. உடலில் உள்ள தசைகள் எந்தவொரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்காருவதால் முதுகுவலி ஏற்படும். அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுங்கள். 

லிப்போ புரோட்டீன் அளவு :

உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதனால் முதுகுவலி மட்டுமே ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். ஆனால், முதுகுவலி மட்டுமல்லாமல் வேறு சிலவகையான பிரச்சனைகளும் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடும். ஆரோக்கியத்திற்கு தேவையான கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போ புரோட்டீன் அளவு குறைந்துவிடும். 

உறுப்புகள் பாதிக்கப்படும் :

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தே இருப்பவர்களில் 54 சதவீதம் பேருக்கு உடலின் செயல்பாடுகள் குறைந்து விட வாய்ப்பு உண்டு. இதனால் உடலின் முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்பட்டுவிடும். 

அதனால், உடலில் இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவுகள் சீராக இருக்காது. அத்துடன் தசைகளும், எலும்புகளும் வலுவிழக்கும். குறிப்பாக கழுத்து மற்றும் முதுகுப்பகுதி தசைகள் இறுகி வலியை உண்டாக்குவது, உடலில் கொழுப்புத்தன்மை அதிகரித்து உடல் எடை அதிகரிக்கும். 

சர்க்கரை நோய் :

ஒருவர் தொடர்ந்து மூன்று மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தால் அவருக்கு நிமிடத்திற்கு ஒரு கலோரி மட்டுமே எரிய ஆரம்பிக்கும். அது மட்டும் இல்லாமல் அவர்களின் இரத்த குழாய் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

தொடர்ச்சியாக நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் நொதிகள் மிகவும் குறைந்துவிடும். இதனால் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்க செய்யும். இதனால் நமக்கு பல பாதிப்புகள் வந்தடையும். 

கால் வலி :

கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடை செய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, தொடர்ந்து உட்கார்ந்தபடியே வேலை செய்வதை தவிர்த்து இடையிடையே சிறிது நேரம் நடந்தால் பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

back pain problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->