பேச்சிலர்ஸ்க்கு ஈசியான சோம்பேறி சிக்கன் ரெசிபி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன் 
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி இலை - அரை பிடி
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி இலைகள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, வெண்ணெய் அல்லது எண்ணெய், உப்பு எல்லாவற்றையும் கலந்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும். 

20 நிமிடம் ஊறவிட்ட பின் அடுப்பில்  பாத்திரத்தை வைத்து சிக்கன் மசாலாவை சேர்த்து பாத்திரத்தை மூடி 4 நிமிடம் வேக விடவும். 

அதன் பின் மீண்டும் ஒரு முறை கிளறி மூடி வைத்து 4 நிமிடம் சிக்கனை வேகவிட்டு எடுத்தால் சட்டென்று பேச்சிலர் சிக்கன் கிரேவி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bachelor somberi chicken gravy easy receipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->