நொறுக்கு தீனி விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..? வாயை கட்டுங்கள் இல்லையேல் அவ்வளவு தான்..!  - Seithipunal
Seithipunal


வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பவர்கள் எதை சாப்பிடுகிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? என்பது தெரியாமல் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பீட்ஸா, பர்கர், எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு வகைகள், கார்பன்-டை-ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்து நாட்களை கழிக்கிறார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு காண்போம்.

நொறுக்கு தீனியின் தீமைகள் :

பீட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், ஐஸ்கிரீம், எண்ணெயில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ் இவையெல்லாம் நொறுக்கு தீனிகளாகும்.

இதுதான் இன்றைய இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடாகும். ஒவ்வொரு உணவுக்கும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமென்று விதிமுறை இருக்கின்றது.

நமது ஆரோக்கியத்திற்கு மைதா நல்லதல்ல. ஏனெனில், இது நமது உடலுக்கு சக்தியைத் தராமல் செரிமானமாக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக்கொள்கிறது. எனவே முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவதுதான் நல்லது.

நொறுக்கு தீனி பொருட்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருப்பதற்கு சேர்க்கும் பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்றுநோயை வரவழைக்கக் கூடியது.

சாலையோர உணவு கடைகளில் வேகவைத்த உருளைக்கிழங்குகளையும், நறுக்கிய வெங்காயத்தையும் திறந்த வெளியில் வைத்திருப்பார்கள்.

இதனால் காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமாக உள்ளது. இவற்றால் வாந்தி, பேதி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பாஸ்ட் புட், நொறுக்கு தீனியை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படும். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும்.

உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையென்றால் மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

பொதுவாக செரிமானம் செய்ய பித்த நீர், கணைய நீர் தேவை. இது குறைந்தால் செரிமானம் ஆகாமல் இருக்கும். இவையெல்லாம் நாம் சாப்பிடுகின்ற உணவைப் பொறுத்துதான் உள்ளது.

இல்லையென்றால் செரிமானம், வாயுகோளாறு, வயிற்றுப்புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்றுநோய், மூலம், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, மாரடைப்பு, மஞ்சள் காமாலை, அதிகபட்சமாக புற்றுநோய் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்கு காரணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avoid unhealthy snacks


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->