அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மறக்காம இதை படியுங்க.! - Seithipunal
Seithipunal


ஹெட்போன் பயன்படுத்துபவரா நீங்கள்:

செல்போன் வந்த பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சுற்றுப்புறமே மறந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இரவு முழுவதும் ப்ளூடூத் இயர்போன்கள், ஹெட்போன்கள் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவை மூலம் பாட்டு கேட்டால் உலகமே மறந்து தான் போகிறது. ஆனால் இவை தரும் விளைவுகள் எண்ணற்றவை.

ஆனால் இந்த வயர்லெஸ் சாதனங்களிலிருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கங்களில் ஒன்று ஹெட்போன் பயன்படுத்துவது. பயணம் செய்யும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், வாகனங்கள் ஓட்டும்போதும் இப்படி பல்வேறு நேரங்களில் ஹெட்போன் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றோம். மேலும், தொலைபேசியின் கதிர் வீச்சில் இருந்து தப்பிக்க தொலைபேசி பேசும்போதும் ஹெட்போன் பயன்படுத்துகிறோம்.

இப்படி அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துவது சரியா? இதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும்? இதற்கான தீர்வு என்ன? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பின்விளைவுகள் என்ன? 

அதிக நேரம் ஹெட்போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு 'சென்ஸரி நியூரல் லாஸ்" எனப்படும் பாதிப்பு ஏற்பட்டு இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். 

மேலும் ஹெட்போன் பயன்படுத்துவதால் இளம் வயதிலையே கேட்கும் திறன் பாதிக்கப்பட்டு காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை பயன்படுத்த நேரிடும்.

தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற வியாதிகள் வர அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதும் ஒரு காரணம் ஆகும். மேலும் அதிகம் நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். 

வண்டி ஓட்டும்போது ஹெட்போன் பயன்படுத்துவதால் அதிகமாக விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது.

அதிக நேரம் ஹெட்போன் பயன்படுத்துவதால் காதில் இருந்து வெளியேறும் அழுக்குகள் சரியாக வெளியேறாமல் காதிலையே தங்கி சீல், காது அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி ஏற்படும். 

நீண்ட நேர ஹெட்போன் உபயோகிப்பதினால் உருவாகும் மின்காந்த அலைகள் உங்கள் மூளையின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பயணத்தின் போது ஹெட்போன்கள் உபயோகிப்பது உங்களுக்கு பயணத்தை எளிதாக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மற்ற நேரங்களை காட்டிலும் பயணத்தின்போது ஹெட்போன் உபயோகிப்பது இருமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தீர்வு :

காதுகளின் ஓட்டைக்குள் செல்லும் ஹெட்போன்களை தவிர்க்க வேண்டும். காதுகளுக்கு வெளியே இருக்கும் படியான பெரிய ஹெட்போன்களை பயன்படுத்துவது நல்லது.

முக்கியமாக சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஹெட்போனை தவிர்த்திடுங்கள் அல்லது ஒலி அளவை குறைத்து கேளுங்கள்.

சாதாரண ஹெட்போன் தானே என்று அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் ஹெட்போனை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

சார்ஜ் ஏற்றிக்கொண்டு போன் பேசுவது, இன்டர்நெட் பயன்படுத்துவது, ஹெட்போனில் பாடல் கேட்பது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention For long Time headset user


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->