90ஸ் கிட்ஸ் ஃபேவரிட் தேன் மிட்டாய் ரெசிபி.! வீட்டிலேயே செய்யலாம் வாங்க.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

இட்லி புழுங்கல் அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப் 
சர்க்கரை - 1 1/2 கப் 
ஜவ்வரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன   
பேக்கிங் பவுடர் - 1/4 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு பவுடர் - 1 சிட்டிகை  அளவு 
 உப்பு -  1 சிட்டிகை  அளவு
எலுமிச்சம் பழம் - 1/2 பழம் 
எண்ணெய் - தேவையானஅளவு

செய்முறை :

அரிசி,உளுந்து மற்றும் ஜவ்வரிசியை எடுத்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு  மூன்று முதல் நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இந்தக் கலவையோடு ஒரு சிட்டிகை அளவு உப்பு  சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

இந்த அரைத்து வைத்த மாவுடன் ஒரு சிட்டிகை அளவு பேக்கிங் சோடா மற்றும் ஆரஞ்சு பவுடரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த ஆரஞ்சு பவுடர் தேன் மிட்டாய்க்கு தேவையான வண்ணத்தை கொடுக்கும் .

ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையை போட்டு  அதனுடன் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி  மிதமான சூட்டில்  சர்க்கரை நீரில் உருகும் வரை கரண்டியின் மூலம் கிளறி விட வேண்டும். 

சர்க்கரை நன்கு கரைந்த பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு அந்த சூட்டிலேயே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சர்க்கரை பாகு கம்பி பதத்தை எட்டும். சர்க்கரை பாகு கம்பி பதத்தை எட்டியதும்  அடுப்பை அணைத்துவிட்டு அதனை இறக்கி விடவும்.

இப்போது ஒரு  கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக கொதித்ததும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவிலிருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து அவற்றை எண்ணையில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். 

பாத்திரத்தின் அளவிற்க்கு ஏற்ப  உருண்டைகளை பொரித்து எடுக்கலாம். பொரித்து எடுத்த உருண்டைகளை  வெதுவெதுப்பான சர்க்கரைப்பாகில் இட்டு  20 முதல் 25 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் அவற்றை எடுத்து சிறிது நேரம் ஆற வைத்தால் நமக்கு சுவையான தேன் மிட்டாய் ரெடி!  வாங்க சாப்பிடலாம்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90s kids favourite then mittai receipe at Home 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->