இது எல்லாம் 90ஸ் கிட்ஸுக்கு மட்டுமே கிடைத்த பொக்கிஷம்.! படித்தால் மெய் மறந்துவிடுவீர்கள்.!  - Seithipunal
Seithipunal


சுகமான நினைவுகளும், மறக்க முடியாத சில நிகழ்வுகளும் கொண்ட பாக்கியம் பெற்றவர்கள் தான் 90-களில் பிறந்த குழந்தைகள்.

பள்ளிக்கூடங்களில் பாதி சிலேட் பென்சில்களை உடைத்துக் கொடுத்து உருவான நட்புகள் போன்றவை மறக்க முடியாத மலரும் நினைவுகள்.

வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும்போது அம்மா கொடுக்கும் ஒரு ரூபாயை பத்திரமாக வைத்து, அந்த ரூபாய்க்கு மிட்டாய்களை வாங்கி நண்பர்களோடு சாப்பிட்டது.

கம்ப்யூட்டரின் உதவி இல்லாமல் ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை செய்து முடிப்பது.

விடுமுறை நாட்களில் பெரும்பாலும் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவது.

வீட்டிலிருக்கும் காய்கறிகளை கொண்டு வந்து கூட்டாஞ்சோறு சமைத்து வட்டமாக அமர்ந்து சாப்பிட்டது.

கைப்பேசிகள் இல்லாத பொற்காலமாக இருந்தது. இதனால் மற்றவர்களிடம் அதிக நேரத்தை செலவிட முடிந்தது.

நமக்கு பிடித்தவர்களிடம் நெருக்கமான அன்பை பகிர்ந்து கொள்வதற்கு இருந்த கடிதப் போக்குவரத்துகள்.

காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு, அழுகும் முகத்தோடு பள்ளிக்கூடம் செல்லும் சுவாரஸ்சியமான நிகழ்வுகள்.

உறவினர்களோடு நேரத்தை செலவிடுவது, கூட்டுக்குடும்ப வாழ்க்கையை உணர்ந்தது, கோவில் திருவிழாக்களில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்தது.

ஆசிரியர், மாணவர்களுக்கு இடையே நல்ல புரிதல் உணர்வு இருந்தது.

நாட்டில் நடக்கும் விஷயங்களை எல்லாம் நாளிதழ்களை பார்த்து தெரிந்துக் கொண்டது.

அம்மா கொடுக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை மிச்சப்படுத்தி ஒரு குட்டி உண்டியலில் சேர்த்து வைத்தது.

பள்ளி மதிய உணவு இடைவெளியில் வீட்டிற்குச்சென்று திரும்பி வரும் ஞாபகம்.

நம் வீட்டிற்கு பக்கத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு அவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்வது.

90-களில் பிறந்த குழந்தைகள் கிடைத்த சந்தோஷத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது. இதை எல்லாம் படித்தால் நீங்கள் அனுபவித்த பல மலரும் நினைவுகள் ஞாபகம் வந்து விடும்...!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

90 KIDS MEMORIES


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->