நிமிடங்களில் இந்த ஸ்நாக் செஞ்சு திடீர் விருந்தாளிகளை அசத்துங்க! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

வெங்காயம் - கால் கப்

கொத்தமல்லி இலை - 2 டேபில் ஸ்பூன்

கருவேப்பிலை- ஒரு கொத்து 

பச்சை மிளகாய் -  1 

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கேற்ப 

தண்ணீர் - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலை கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து மிளகாய் தூள் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

வடை மாவு பதத்தில் இருக்க வேண்டும். மிகவும் தண்ணீராகவும் இருக்கக் கூடாது கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.

அதன் பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறு சிறு உருண்டைகளாக இந்த மாவை போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் பொரித்தெடுத்தால் மொறு மொறு உடனடி ஸ்நாக்ஸ் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 minutes snacks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->