விழித்தெழு பெண்ணே... நொடி நேரத்தில்... எதுவும் நடக்கலாம்... ஜாக்கிரதை!! - Seithipunal
Seithipunal


இக்காலத்தில் ஒரு குடும்பத்தை நடத்த பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். படித்து முடித்த உடனேயே பல பெண்கள் வேலைக்கு சென்று தன் தாய், தந்தைக்கு உதவியாக இருக்கின்றனர்.

திருமணமான பெண்களும் வேலைக்கு சென்று தன் கணவருக்கு உதவியாக இருகின்றனர். வேலைக்கு செல்லும் இடத்திலும், வீட்டிற்கு வரும் வழியிலும் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்வோம்.

முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய நூலகங்கள் போன்ற இடங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களிலும், அலுவலகத்திலும் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நல்லது.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க போகும்போது இருசக்கர வாகனத்தையோ அல்லது காரையோ நீண்ட தொலைவில் நிறுத்தாமல் கடைக்கு அருகிலேயே நிறுத்தி வைப்பதுதான் மிகவும் பாதுகாப்பானது.

ஏனெனில் இரவு சமயங்களில் கடையில் இருந்து சிறிது தூரம் சென்று வாகனத்தை எடுத்துவர சென்றால் அச்சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

பொது இடம், பார்ட்டி போன்ற இடங்களில் குளிர்பானங்களை வைத்துவிட்டு வேறு இடத்திற்கு எழுந்து செல்லாமல் இருப்பது பாதுகாப்பானதாகும்.

இப்போது பெண்கள் பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வருவதால் நள்ளிரவு நேரங்களில் கூட வீட்டிற்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் காரில் வருவது போல் இருந்தால் முதலில் கார் ஓட்டுநரை கவனிக்க வேண்டும்.

அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக்கூடாது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

womens safety tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->