பெண்களின் சிறுநீர் கசிவு பிரச்சனை..!! காரணமும் தீர்வுகளும்..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள சில பெண்களுக்கு சிரித்தல்., இருமல் மற்றும் தும்மல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும் சமயத்தில் சிறுநீர்கசிவானது ஏற்படும். இந்த பிரச்சனையை மருத்துவ முறையில் ஸ்ட்ரெஸ் யூரினரி இன்காடினன்ஸ் என்று அழைப்பது வழக்கம். இந்த நோய் ஒரு வினோதமான நோயாக இருக்கும் நிலையில் சிரித்தல்., இருமல்., தும்மல் மற்றும் சில நேரத்தில் எடையுள்ள பொருட்களை தூக்கினாள் சிறுநீர் கசிவானது ஏற்படும். இந்த பிரச்சனையை கணவன் மற்றும் பெற்றோரிடம் தெரிவிக்க சில நேரத்தில் கூச்சம் ஏற்படலாம். 

இதுமட்டுமல்லாது சிறுநீர் கசிவு ஏற்பட்டு சிறுநீர் வாடையானது ஏற்படுமோ என்று எண்ணியும் சில பெண்கள் மனதளவிலும்., உடலளவிலும் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை சில நேரம் வயதான உறவினர்களிடம் தெரிவித்தால் வயது முதிர்ச்சியை காரணம் காட்டி., இந்த பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்று கூறுவார்கள். இந்த பிரச்சனைக்கு பெண்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான ஆலோசனையை பெற்று சிகிச்சை மேற்கொள்வது அவசியம். 

periods, stomach pain, menopause, மாதவிடாய், வயிற்று வலி, மாதவிடாய் கோளாறு,

இந்த பிரச்சனையை பொறுத்த வரையில் வீட்டில் இருக்கும் பெண்களை காட்டிலும்., பணியிடங்களில் பணியாற்றும் பெண்கள் பெரும் தர்மசங்கட நிலைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு மேலை நாடுகளில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில்., தற்போது இந்தியாவில் இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கையாக சிறுநீர் கழிக்கும் சமயத்தில் தசைகள் தளர்ந்து சிறுநீரானது வெளியேறும். இது போன்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கு நிரந்தர தளர்ச்சி இருப்பதால் மேற்கூறிய விஷயங்கள் ஏற்பட்டாலே சிறுநீர் கசிவானது ஏற்படும். 

இதுமட்டுமல்லாது வேகமான அதிர்வு., படிகளில் இறங்குதல் மற்றும் ஏறுதல் போன்ற பிரச்சனையும்., அதிகளவு குழந்தைகளை பெற்றெடுத்த பெண்களுக்கும் இது போன்ற பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைக்கு பிரசவத்திற்கு பின்னர் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். பெண்களில் பெரும்பாலானோர் பிரசவத்திற்கு பின்னர் உடற்பயிற்சிகளை சரிவர மேற்கொள்வதில்லை. உடல் பருமனான பெண்களுக்கு இயற்கையாகவே இத பாதிப்பு எளிதில் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

குழந்தை, அழகிய குழந்தை, baby, cute baby,

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையானது எளிய முறையிலான பத்து நிமிட சிகிச்சையாகும். இதற்கு அறுவை சிகிச்சையானது மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சிகிச்சையை மேற்கொள்ள தவிர்க்கும் பெண்களுக்கு சிறுநீர் தொற்று., சிறுநீரக கற்கள்., சிறுநீரக பாதையில் அடைப்பு., சிறுநீர் கழிப்பதில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையை எளிதில் இயற்கையான முறையில் சரிசெய்யவும் வழிமுறைகள் உள்ளது. 

girl urine part, பெண்களின் சிறுநீரக அமைப்பு,

அவ்வாறான இயற்கை சிகிச்சைகளாக அதிகளவு தண்ணீர் அருந்துதல்., இளநீர் பருகுவது., சிறுநீர் கழிக்கும் நேரத்தில் வலி ஏற்பட்டால் பரங்கிக்காயின் சாறை குடித்தால்., தினமும் கட்டாயம் இரண்டு அத்திப்பழங்களை உண்ணுதல் மற்றும் அத்தி பழங்களை சுமார் 10 மணிநேரம் ஊறவைத்து நீரை பருகுதல்., சிறுநீர் வழக்கத்தை விட குறைவாக சென்றால் உலர்திராட்சை சாற்றை குடிப்பது மற்றும் சிறுநீர் அதிகளவு கழிக்க நேர்ந்தால் தேன் சாப்பிடுவது போன்றவற்றின் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் சரி செய்யலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman urine leakage causes and solutions


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->