குழந்தைகளுக்கு விரும்பும்., கோதுமை மில்க் கேக்..!! - Seithipunal
Seithipunal


கோதுமை மாவில் சப்பாத்தி, பூரி போன்றவை செய்வர். தற்போது வித்யாசமாகமோதுமை மாவில் எப்படி மில்க் கேக் செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

தயிர் - கால் கப்

நெய் - 2 டீஸ்பூன்
கோதுமை மாவு -  1 கப்
பால் - 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா - அரை டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

பாகு தயாரிக்க:

சர்க்கரை - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - 1 1/4 கப்

செய்முறை:

சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து தேவையான அளவு சேர்த்து கொள்ளலாம். பாலுக்கு பதிலாக பால் பவுடரையும் பயன்படுத்தலாம்.

பிசைந்த மாவை சப்பாத்தி கல்லில் இட்டு அடர்த்தியாக தேய்க்கவும். அதனை வேண்டிய வடிவில் கட் செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அதனை குலாம்ஜாமூன் பதத்திற்கு காய்ச்சி கொள்ளவும்.

பொரித்தெடுத்த கேக்கை அந்த பாகில்  சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். குழந்தைகள் விரும்பும் மில்க் கேக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wheat Milk cake Recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->