இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவரா நீங்கள் ? அப்போ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


மனிதனுக்கு பொதுவாகவே சரியான தூக்கம் அவசியம். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அப்படியில்லையெனில் பல உடல், மன நல கோளாறுகள் ஏற்படும் அவை என்னவென பார்போம்.

மூட் ஸ்விங்ஸ்:

6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை . இதனால், எரிச்சல், கோபம், சோர்வு , கவனசிதறல் போன்றவை ஏற்படும்.

மனநலத்தில் பாதிப்பு :

சரியான தூக்கம் இல்லை என்றால் ஒருவர் மன ஆரோக்கியம் சீர்கெடும். சரியாக தூங்கவில்லை எனில் க்ளினிக்கல் டிப்ரஷன் போன்ற மனநிலைக் கோளாறுகள் ஏற்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பு:

தூக்கமின்மை உங்களில் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும். ஒருவர் தூங்கும் போது தான் நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள் மற்றும் சைட்டோகைன்கள் போன்ற பாதுகாப்பு, தொற்று-எதிர்ப்புகளை உற்பத்தி செய்கிறது அதனால், நோய் எதிர்ப்பு மண்டலம் சரியாக செயல்பட தூக்கம் அவசியம்.  அதே போல தூக்கமின்மை உடலுறவின் மீதான் ஆர்வத்தை குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

what are the Effects Of insomnia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->