கர்ப்பப்பை இரக்கத்திற்கான அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன?.!! - Seithipunal
Seithipunal


பெண்மை... பெண்மையின் தனித்துவம் என்ன என்று கேட்டால் பெண்களுக்கே தெரியாத நிலையில் தான் நாம் இன்றளவில் இருந்து வருகிறோம். பெண்மையின் தனித்துவமே., பெண்கள் வாங்கி வந்த வரமான கர்ப்பப்பை தான் பெண்மையின் வரமாகும். பெண்கள் குழந்தையாக இருந்து., பூபெய்வதில் இருந்து பெண்ணின் அடையாளமாகவும்., கவசமாகவும் இருக்கிறது. இவ்வாறான புனிதமான கர்ப்பப்பையில் நோய்த்தொற்று மற்றும் நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனைப்போன்று கர்ப்பப்பை இறக்கம் என்ற பிரச்சனையும் இருக்கிறது. 

இந்த பிரச்சனையை பல பெண்கள் இன்னும் அறிந்திருப்பதில்லை. பெண்கள் அணியும் காதணி, மூக்குத்தி, கொலுசு, அரைஞாண் கயிறு., மெட்டி., தங்க ஆபரணங்கள்., உடுத்தும் ஆடைகள் மற்றும் உண்ணும் உணவு., தலையில் சூடும் பூக்கள் என்று அதன் அர்த்தத்தை புரிந்தே நம்மை அதற்கு பழக்கப்படுத்தி சென்றனர். கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனை குறித்த அறிதலும்., புரிதலும் இல்லாததால் பல பெண்கள் தங்களின் வாழ்க்கையை பரிதாபமாக இழந்து வருகின்றனர். மேலும்., இது குறித்த பிரச்சனையை வெளியே சொல்லாமலும் பல பெண்கள் இருந்து வருகின்றனர். 

கருப்பை, கர்ப்பப்பை,

பொதுவாக புதியதாக பருவமடைந்த பெண்ணின் கர்ப்பப்பை 2 செமீ அளவு முதல் 5 செமீ - 6 செமீ அளவு வரை வளர்கிறது. இதே கர்ப்பப்பை பிரசவ நேரத்தில் சுமார் 5 கிலோ எடையுடன் 30 செமீ அளவில் விரிவடைந்து இருக்கும். கர்ப்பப்பையை பொறுத்த வரையில்., குழந்தையை பேறை தவிர்த்து பிற பணிகள் கிடையாது என்பதால்., பிரசவத்திற்கு பின்னர் மீண்டும் சுருங்கி தனது இயல்பு நிலையை அடைகிறது. இனி கர்ப்பப்பையில் இறக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் கர்ப்பப்பை இறக்கத்திற்கான அறிகுறிகள் குறித்து இனி காண்போம். 

கர்ப்பப்பை இயக்கத்திற்கு பொதுவான காரணங்களாக வயிற்றில் இருக்கும் கொழுப்பின் அழுத்தத்தால் ஏற்படும் அழுத்தம்., ஆஸ்துமா மற்றும் தொடர்ச்சியான இருமலின் காரணமாக - உள்வயிற்று பகுதியில் ஏற்படும் அழுத்தம்., பிரசவ நேரத்தில் அதிகளவு அழுத்தம் தந்து குழந்தையை வெளியேற்றுவதும்., பிரசவத்திற்கு பின்னர் கர்ப்பப்பை சுருங்குவதற்கு முன்னதாகவே உடனடி கர்ப்பம் தரிப்பது., மலச்சிக்கல் பிரச்சனை., கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் தசை நார்களின் பலவீனம்., அன்றைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரசவ பொருட்களான கூர்மையான ஆயுதங்கள் போன்றவை கர்ப்பப்பை இரக்கத்திற்கான காரணங்கள் ஆகும். 

சிசு, தாயின் வயிறில் இருக்கும் குழந்தை,

கர்ப்பப்பை இரக்கத்திற்கான அறிகுறிகளாக நடப்பதில் ஏற்படும் அதிகப்படியான சிரமம்., கர்ப்பப்பை இரக்கத்தால் தொடைகளுக்கிடையே இறங்கி ஏற்படும் உரசலின் விளைவாக புண்கள்., கர்ப்பப்பை இரக்கத்தால் சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் பகுதி இறங்கும் சோகம் மற்றும் இதன் விளைவாக இடுப்பு வலி (இடுப்பில் கைவைத்தார் போல நிற்கும் போது எளிதாக இருப்பது)., சதை போன்று கீழ்ப்பாக்கத்தில் இடிப்பது., வெள்ளைப்போக்கு அதிகரிப்பது., பெண்ணுறுப்பின் அதிகளவு உலர்தன்மை., அடிக்கடி அரிப்பு மற்றும் புண்., இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் சமயத்தில் கருப்பை இறங்கும் உணர்வு., அடிக்கடி சிறுநீர் கழிப்பது., சிறுநீரை அடக்க முடியாத நிலை மற்றும் சிரிக்கும் சமயத்தில் ஏற்படும் சிறுநீர் வெளியேற்றம்., மலச்சிக்கல் உணர்வு மற்றும் அடிக்கடி மலம் கழிக்க தோன்றுவது போன்றவை அறிகுறியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What are the causes of cervical compassion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->