உடல் எடையை அதிகரிக்க உணவில் இந்த எண்ணெய்யை சேர்த்து கொள்ளுங்கள்..!  - Seithipunal
Seithipunal


காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தனிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும். இதில் தான் வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. 

தினமும் உணவில் வேர்க்கடலை எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள நல்ல கொழுப்பால், உடல் எடை அதிகரிக்கும்.

கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

ஊறுகாய் போட்ட உடனே சாப்பிட வேண்டுமெனில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக்கொண்டு மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாயைக் கொஞ்சம் வதக்கிக் கொண்டால் சுவையாக இருக்கும்.

பூரி செய்யும்போது விரிந்து வராமல் போகும். அதற்கு மாவில் சிறிது பால் சேர்த்துப் பிசைந்தால், பூரி நன்கு விரிந்து வரும். சூடான எண்ணெயை மாவில் ஊற்றிப் பிசைந்தாலும் பூரி நன்றாக விரிந்து வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weight gain tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->