வெந்தயத்தில் இருக்கும் அளவற்ற மருத்துவ பயன்கள்!!  - Seithipunal
Seithipunal


மாதவிடாய் பிரச்சனைகள் தீர, வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.

குழந்தையை பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வதனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு வெந்தயத்தில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் தான் முக்கிய காரணம்.

கல்லீரல் கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்.

கொலஸ்ட்ரால் குறையும் ஆய்வுகளில் வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.

ஆர்த்ரிடிஸ் இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி. இது கடுமையான வலியுடன், வீக்கத்துடனும் காணப்படும்.

தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதுடன் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Venthiyathin palangal 


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->