மாவுச்சத்துமிக்க, வெஜ்டேபிள் அரிசி-நூடுல்ஸ்.! செய்வது எப்படி.!   - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

அரிசி - 1/4 Kg
உருளைகிழங்கு - 3
கேரட் துறுவல் - ஒரு கப்
தேங்காய் துறுவல் - அரை கப்
முட்டைகோஸ் துறுவல் - 3/4 கப்
பச்சை பட்டாணி - 20 பட்டாணி கொட்டைகள்.            
இஞ்சி பூண்டு விழுது - சிறிது
வெங்காயம் - 1(நறுக்கியது)
தக்காளி - 1
உப்பு - தேவையாளவு.
மிளகாய் தூள் - தேவையானளவு.
கருவேப்பில்லை - தேவையானளவு
கொத்தமல்லி - தேவையானளவு

செய்முறை:

அரிசி முறுக்கு செய்வதற்கு தகுந்தாற்போல் அரிசியை ஊறவைத்து, அரைத்து முறுக்கு குழாயின்(சிறு சிறு துளைகளை கொண்டது) மூலம் ஒரடுக்கு கொண்ட நூடுல்ஸ் ரோல் செய்து வேயிலில் ஆற விடவேண்டும்.

சிறிதளவு உப்பு சேர்த்து உருளைகிழங்கை வேகவைத்து பேஸ்ட்போல் மசிந்து கொள்ளவேண்டும்.

வாணலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கருவேப்பில்லையுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு, வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவேண்டும்.

பிறகு, பிசைந்த உருளைகிழங்கை சேர்த்து வதக்கியப்பிறகு கேரட், தேங்காய் மற்றும் முட்டைகோஸ் துறுவல்களை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

இதனுடன் சிறிதளவு மிளகாய் தூள், உப்பு(உருளைகிழங்கை உப்புடன் சேர்த்து பிசைந்திருப்பதால், சிறிதளவு மட்டும்) கிளற வேண்டும்.

பிறகு, தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கும் வரை காத்திருக்கவும். கொதித்தப்பிறகு அரிசியால் செய்த நூடூல்ஸை சேர்க்கவும்.(கிளறும்போது கவனம் வேண்டும். எனெனில், நூடுல்ஸானது அரிசியால் செய்யப்பட்டது என்பதால் கிளறும்போது நூடுல்ஸானது சிதற வாய்ப்புள்ளது).

வேகவைத்த நூடுல்ஸில் சிறிதளவு பெப்பர் தூவி மற்றும் கொத்தமல்லி  தூவி பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VEGETABLE RICE NOODLES


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->