இன்றைய ஸ்பெஷல்..!! குழந்தைகளுக்கு பிடித்த மாலை உணவு..!! - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு சத்தான உணவு தருவது என்பது தாய்மார்களுக்கு மிகப்பெரிய வேலை. அவர்களின் வேலையை எளிதாக்கும் வகையில் குழந்தைகளுக்காக சத்து நிறைந்த காய்கறி பணியாரம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ

உளுந்து - 1/4 கிலோ
கேரட் - 1 கப்
தேங்காய் - 1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ப.மிளகாய் - 3
முட்டைக்கோஸ் - 100 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - விருப்பத்திற்கேற்ப
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க: கடுகு, உளுந்தப்பருப்பு

செய்முறை:

முதல் நாள் இரவு பச்சரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். பின்னர் கேரட், கொத்தமல்லி, ப.மிளகாய், முட்டைகோஸ், புதினா, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மறுநாள் காலை கடுகு, உளுந்தப்பருப்பு, கேரட், முட்டைக்கோஸ், தேங்காய், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை போட்டு தாளித்து மாவில் போட்டு கரைத்து கொள்ளவும்.

பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை பணியாரமாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veg Paniyaram recipe


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->