அட்டகாசமான நண்டு கிரேவி மசாலா இப்படி செஞ்சு பாருங்க! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்
நண்டு - 1/2 கிலோ
பட்டை - 1 சின்ன துண்டு
கிராம்பு- 1
ஏலக்காய் - 1
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி 
தேங்காய் - 2 துண்டு
மிளகு - 1 1/2 தேக்கரண்டி 
சீரகம் - 1 தேக்கரண்டி 
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி 
சின்ன வெங்காயம்- 8
தக்காளி - 2
பூண்டு - 6
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலைகள்- ஒரு கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி 
உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், மிளகு, 1/2 டீஸ்பூன் சீரகம், தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும். பொறிந்தவுடன் சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியப்பின் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதங்கியப்பின் மிளகாய் தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை சேர்த்து உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். 

அதன்பின் அரைத்து வைத்த மசாலாவைப் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் வேகவிடவும்.  வெந்ததும் கிளறிவிட்டு மேலாக கொத்தமல்லி இலைகள் தூவிவிட்டால் அசத்தலான சுவையுடன் நண்டு மசாலா கிரேவி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Try this Delicious crab gravy masala receipe!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->