முடி வளர்ச்சிக்கு உதவும், சிம்பிள் டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


வாழைப்பழ மாஸ்க்: 

2 வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். 

விளக்கெண்ணெய்: 

hair growth, seithipunal

விளக்கெண்ணெயில் முடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய ஃபேட்டி அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. எனவே இதனைக் கொண்டு வாரம் ஒருமுறை நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து குளித்தல் முடி நன்றாக வளரும்.

முட்டை மாஸ்க்: 

1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அத்துடன் 1 கப் பால், 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், பாதி எலுமிச்சையைப் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வருவதன் மூலம் முடி ஆரோக்கியமாக வளரும்.

hair growth, seithipunal

ஆயில் மசாஜ்:  

வாரத்திற்கு ஒருமுறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் ஸ்கால்ப்பில் இரத்தம் ஓட்டம் அதிகரித்து, முடி வலிமைப் பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tips for hair growth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->