குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 200 கிராம்

குடைமிளகாய் - 1 

கேரட் -1

பீன்ஸ் - 4

வெங்காயம் - 2

தக்காளி - 2 

கொத்தமல்லி 

புதினா

தயிர் - 2 கப்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

தனியா தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன். 

வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

சோம்பு - 2 டீஸ்பூன் 

பட்டை - 2 

கிராம்பு - 2 

பிரிஞ்சி இலை - 2

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், கேரட், பீன்ஸ், குடைமிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு பாஸ்தாவை கொதிக்கும் நீரில் போட்டு பாதி வெந்தவுடன் ஒரு வடிதட்டில் கொட்டி குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி காய வைத்து சோம்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும். 

பிறகு வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கிய பின்பு காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி, புதினா, குடைமிளகாயை போட்டு வதக்கவும். 

பின்பு மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் போட்டு வதக்கி, தயிர் சேர்த்து மூடி வைக்கவும். பிறகு மசாலாப் பொருட்கள் சேர்ந்து காய்கறிகள் வெந்த பிறகு, எண்ணெய் பிரிந்து ஓரம் வரும் போது பாஸ்தாவைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சுவையான வெஜிடபிள் பாஸ்தா பிரியாணி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Vegetable Pasta biryani


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->