டேஸ்ட்டி வெஜ் மோமோஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான வெஜ் மோமோஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

வெங்காயம் - 1 

கேரட் - 2 

முட்டைகோஸ் - 1/2 கப்

குடைமிளகாய் - 1 

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்

எண்ணெய்

உப்பு  

செய்முறை:

முதலில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும். 

பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், கேரட், முட்டைக்கோஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். 

பிறகு சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி வைக்கவும். பின்பு பிசைந்து மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி அளவிற்கு தேய்த்து இதன் நடுவில், வேகவைத்த காய்கள் மசாலாவை வைத்து, அனைத்து பக்கமும் சேர்த்து மூடிவிடவும். 

பின்பு இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான வெஜ் மோமோஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Veg momos recipe


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->