பிரச்சனைய பிரச்சனைன்னு பார்க்காமா... இதை ட்ரை பண்ணி பாருங்க.!! - Seithipunal
Seithipunal


வயிற்று எரிச்சல், புளிப்பு ஏப்பம், வாயுத்தொல்லை, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், மலம் கழிக்கும் உணர்வு இவையெல்லாம் இன்றைக்கு சர்வ சாதாரணமாகப் பலருக்கும் ஏற்படும் பிரச்சனைகள். இவை ஏற்படுவதற்கான அடிப்படையான, மிக முக்கியமான காரணம், செரிமானக் கோளாறு. அந்த வகையில் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

இஞ்சி : 

இஞ்சி கலந்த வெந்நீரை தினமும் காலை, மாலை இருவேளையும் குடிக்கலாம். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம். இதனால் செரிமானம் எளிதாகும்.

வெந்நீர் :

சாப்பிட்டவுடன் சிறிதளவு மிதமான சூடுள்ள நீர் பருகினால், உணவுப் பொருட்கள் எளிதில் உடைந்து செரிமானம் சீராக நடைபெறும். 

புதினா :

நாம் உணவில் அதிகமாக புதினாவை சேர்த்து கொள்கிறோம். நம்மூரில் அசைவ உணவுகள், ரசம் ஆகியவற்றில் செரிமானத்தை எளிதாக்க புதினா அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புதினாவை உணவில் சேர்ப்பதால், வாயுபிடிப்பு, வலி, எரிச்சல், புளிப்பு ஏப்பம் உள்ளிட்ட சிரமங்கள் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாகிவிடும்.

லவங்கம் : 

உலகளவில் லவங்கத்தை சமையலில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முதலில் சமையலில் சுவை, வாசனைக்காக உலகநாடுகளில் லவங்கத்தை பயன்படுத்தி வந்தனர். அதன் பிறகு இதனுடைய மருத்துவ பயனை அறிந்து செரிமானத்திற்காக பயன்படுத்த தொடங்கினர். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் செரிமான அமிலத்தால் வெளியாகும் வாயுவின் அளவை லவங்கம் கட்டுப்படுத்துகிறது. 

வெந்தயம் :

வைட்டமின்கள் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்றவை வெந்தயத்தில் அதிகம் உள்ளது. மேலும் வெந்தயம் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்டுகளும், நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால் அசைவ உணவுகளில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதைவிட, இரவு தண்ணீரில் ஊறவைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

ஓமம் :

ஓமம், அசிடிட்டி, செரிமானக் கோளாறு ஆகியவற்றைப் போக்கும் தன்மையைக் கொண்டது. 

ஓமத்தில் உள்ள சில கூறுகள் செரிமான நொதிகளின் தயாரிப்பை ஊக்குவிக்கிறது. அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் காலை, மாலை பருகி வந்தால், வயிற்று மந்தம் குணமாகும்.

சீரகம் :

இரும்பு, கால்சியம், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் கொண்டது சீரகம். பெரும்பாலான உணவுகளில் செரிமானத்தை எளிதாக்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stomach pain issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->