சூப்பரான ஸ்பைஸி வெண்டைக்காய் வறுவல்.! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள் :

வெண்டைக்காய் - 250 கிராம்
இஞ்சி - 1/2 துண்டு
பூண்டு - 7 பற்கள்
பச்சை மிளகாய் - 5
கடலைமாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன் 
சீரகத்தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தே. அளவு

செய்யும் முறை :

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

வெண்டைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெண்டைக்காயில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய் தூள், அரைத்த இஞ்சி பூண்டு விழுது, சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர், அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்த வைத்துள்ள வெண்டைக்காயை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும்.

பின் சிறிதளவு கடலை, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

பின் பொரித்தவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

அதன்மேல் மாங்காய் தூள் மற்றும் மசாலா தூவி கொள்ளவும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

spicy ladys finger fry preparation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->