மாதவிடாய் பிரச்சனை, உடல் சூட்டினை தணிக்க இப்படியொரு குழம்பா?..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெண்கள் தங்களது குறிக்கோள் மற்றும் பணிகளில் காண்பிக்கும் ஆர்வத்தினை உடல்நலத்தில் காண்பிக்க தவறி வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சனைகளையும் அனுபவித்து வரும் நிலையில், மாதவிடாய் தொடர்பான பிரச்சனை இன்றளவில் அதிகரித்து வருவதே இதற்கு சிறந்த சான்றாகவும் அமைகிறது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் சூட்டினை தணிக்க சோற்றுக்கற்றாழை குழம்பு செய்வது எப்படி என இனி காணலாம். 

சோற்றுக்கற்றாழை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: 

சோற்றுக் கற்றாழை - 3,
நல்லெண்ணெய் - 4 தே. கரண்டி,
வெந்தயம் - 1/4 கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
சிறிய வெங்காயம் - 10,
வேர் கடலை - 1 கரண்டி,

புளி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய் - கால் கிண்ணம், 
குழம்பு மிளகாய் தூள் - 4 கரண்டி,
மஞ்சள் தூள் - 1/4 கரண்டி,
தக்காளி - ஒன்று,
கொத்தமல்லி - சிறிதளவு.

சோற்றுக்கற்றாழை குழம்பு செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட சோற்றுக்கற்றாழையின் தோலினை நீக்கி எடுத்துவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்த நீரில் கழுவி எடுக்க வேண்டும். பின்னர் புளியினை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

எடுத்துக்கொண்ட தேங்காயை நன்றாக அரைத்து, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடிபொடியாக நறுக்க வேண்டும். வானெலியில் நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம், கருவேப்பில்லை சேர்த்து, சிறிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். 

வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கி, புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் சோற்றுக்கற்றாழையை எடுத்து தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் பொறுத்து இறக்கினால் சுவையான சோற்றுக்கற்றாழை குழம்பு தயார். 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அத்துடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sotrukatralai Kulampu Recipe Tamil Help to Cure Irregular Periods and Control Body Heat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->