மாதத்தில் இரண்டு மாதவிடாய் ஏற்படுகிறதா?.. மாதவிடாய் நேரத்தில் மலச்சிக்கலா?.. தீர்வு என்ன?..!! - Seithipunal
Seithipunal


மாதத்தில் இரண்டு மாதவிடாய் : 

மாதவிடாய் நாட்கள் பெண்களுக்கு மாதாமாதம், முன் பின் மாற்றமடைந்து ஏற்படுவது இயல்பான விஷயமாகும். இந்த மாதவிடாய் 10 நாட்களுக்கு மேலாக தள்ளி செல்லுதல் மற்றும் ஒரே மாதத்தில் 2 முறை மாதவிடாய் போன்ற பிரச்சனைகளை கண்டறிந்து மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளுதல் அவசியமான ஒன்றாகும். 

மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்படுகிறதா அல்லது வெஜினாவில் (யோனி) இருந்து இரத்தக்கசிவா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். இயல்பான மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டு இருப்பின் அது மாதவிடாயாக இருக்கலாம். சிறிது இரத்தக்கசிவு ஏற்பட்டால், இந்த ரத்தக்கசிவால் நாப்கின் முழுவதுமாக உபயோகம் செய்யாவிடில் அது இரத்தக்கசிவாக இருக்கலாம். 

யோனியில் இரத்தக்கசிவு இருந்தால் தாம்பத்தியம் மேற்கொண்ட காரணத்தினாலோ அல்லது கருகலைந்தாலோ, பிரசவ காலத்திலோ பெரும்பாலும் ஏற்படும். இதற்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுதல் நல்லது. 

இந்த இரத்தக்கசிவு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில், இதே நிலைமை மாதாமாதம் இரண்டு முறை ஏற்படுமாயின் கட்டாயம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை அல்லது சிகிச்சை பெற வேண்டும். இந்த இரண்டு முறை மாதவிடாய் தைராய்டு சுரப்பின் மாற்றம் காரணமாகவும் ஏற்படலாம். 

மாதவிடாய் இறுதியை எட்டும் 40 வயதிற்கு மேல் கூட இந்த பிரச்சனை ஏற்படலாம். அதிகளவு கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்ளுதல், மனஅழுத்தம் காரணமாக உணவின்மை, தூக்கமின்மை, திடீர் உடல் எடை அதிகரிப்பு மற்றும் குறைவு போன்ற காரணத்தினாலும் மாதவிடாய் இரண்டு முறை ஏற்பட வாய்ப்புள்ளது. மாதத்திற்கு இரண்டு முறை மாதவிடாய் ஏற்படும் பட்சத்தில் கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் பிரச்சனை: 

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை என்பது இயல்பானது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிடாய் நாட்களில் மலசிக்கல் அசைவுகரியமானதாக இருந்தாலும், இந்த பிரச்சனை தவிர்க்க இயலாதது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மாதவிடாய் நேரங்களில் ஹார்மோன் பிரச்சனை காரணமாக, மாதவிடாய் நாட்களுக்கு 2 முதல் 3 நாட்களுக்கு முன்னதாகவே மலச்சிக்கல் பிரச்சனை துவங்கும் என்றும், உடலில் சுரக்கும் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோனின் சுரப்பு அதிகரிக்கும் நேரத்தில், செரிமான ஆற்றலை குறைத்து மலச்சிக்கலுக்கு காரணமாக அமைகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனை தவிர்ப்பதற்கு மாதவிடாய் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாகவும், மாதவிடாய் நேரத்திலும் நார்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும் என்றும், ஆப்பிள் மற்றும் பீன்ஸ், கீரை வகைகள், தனியங்கள், வாழைப்பழம், கேரட், மக்காசோளம் போன்றவை சாப்பிட வேண்டும். இதுமட்டுமல்லாது அதிகளவு தண்ணீர் குடிப்பது, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிப்பது நல்லது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Solution of Menstruation twice a month and Constipation during menstruation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->