இன்றைய ஸ்பெஷல்..!! சூப்பரான சேமியா முட்டை பிரியாணி..!! - Seithipunal
Seithipunal


சேமியாவில் எப்போதும் கிச்சடி, உப்புமா போன்ற போன்றவை தான் பொதுவாக செய்வோம். தற்போது சேமியாவில் சூப்பாரான பிரியாணி எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

சேமியா - 1 கப்

நெய் - 3 டீஸ்பூன்
பட்டை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை- 3
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

சேமியாவை நெய்யில் வதக்கி கொள்ளவும். காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் முட்டையை உடைத்து ஊற்றவும். இதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். கொதித்த பிறகு, சேமியாவை சேர்க்க வேண்டும். இறக்கும் போது கொத்தமல்லி தழை சேர்க்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Semiya Egg Briyani Recipe


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->