ஆரோக்கியமான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி !! - Seithipunal
Seithipunal


இட்லி என்றால் அரிசி, உளுந்து சேர்த்து அரைத்து எப்பொழுதும் ஒரே மாதிரியாகத் தான் செய்கின்றோம். அதற்கு பதிலாக சற்று வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமான இட்லியை செய்து சாப்பிட நினைத்தால் கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை செய்யலாம். இப்போது அந்த கேழ்வரகு ஸ்டப்டு இட்லியை எப்படி எளிதாக செய்வதென்று பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கிலோ

உளுந்து - 250 கிராம் 

கொண்டைக்கடலை - 200 கிராம் 

வெல்லம் - சிறிதளவு 

வரமிளகாய் - 5 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை :

முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். 

பிறகு கேழ்வரகு மாவையும், உளுந்து மாவையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். பின் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து, பின்பு வேக வைத்து வடிகட்டி அத்துடன் வரமிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர், இட்லித் தட்டில் எண்ணெய் தடவி முதலில் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1ஃ2 கரண்டி ஊற்றி அதன் மேல் 1ஃ4 கரண்டி கொண்டைக்கடலை கலவையை ஊற்றி, மீண்டும் கேழ்வரகு, உளுந்து மாவு கலவையை 1ஃ4 கரண்டி ஊற்றவும். பிறகு இட்லியை வேக வைத்து எடுத்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு ஸ்டப்டு இட்லி தயார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

raagi idly preparation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->