வெக்சிங்க் செய்பவரா நீங்கள்??...!! அவசியம் செய்ய வேண்டிய சில டிப்ஸ்...!! - Seithipunal
Seithipunal


பெண்கள் தங்களுள் உடலில் உள்ள தேவையற்ற முடிகளை வெக்சிங்க் மூலம் நீக்குவர் அப்படி செய்யும் பின்னர் சில விஷயங்களை நாம் தவறாமல் செய்ய வேண்டும்.

வாக்ஸ் செய்த பின்பு அதில் ரோம வளர்ச்சியை தடுக்கும் லோஷனை பூசலாம். இந்த லோஷன் வாக்சிங்குக்கு பின்பு சருமத்தில் ஏற்படும் அழுக்குகளை நீக்கும் இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள தண்ணீர் தன்மையை தக்கவைக்கும்.

வாக்ஸ் செய்த பின்பு ஐஸ் கியூப் பயன்படுத்தி மசாஜ் செய்வது மிகவும் நல்லது. சருமத்தில் நீர்க்கட்டு, வீக்கம் போன்றவை தோன்றுவதை ஐஸ் கியூப் கட்டுப்படுத்தும். ஐஸ் கியூபை சருமத்தில் நேரடியாகவோ, காட்டனில் சுற்றி பொதிந்துவைத்தோ மசாஜ் செய்யலாம்.

வாக்சிங் செய்த இடத்தில் குறைந்தது 48 மணி நேரமாவது சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. சூரிய ஒளிபட்டால் சருமம் பாதிக்கப்படும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது.

 

வாக்சிங் செய்த இரண்டு நாட்களுக்கு உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும். கடுமையான உடல் உழைப்பையும் தவிர்ப்பது சிறந்தது. தவிர்க்காவிட்டால் உடலில் உருவாகும் அதிக வியர்வை, பாக்டீரியாக்களை உருவாக்கி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

properly cared for after waxing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->