குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட்டில் தோசை.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

சாக்லேட் சிரப் - 1/4 கப்

தோசை மாவு - 1 கப் 

முந்திரி - தேவையான அளவு 

நெய் - 4 ஸ்பூன்

செர்ரி பழம் - தேவையான அளவு

திராட்சை -  தேவையான அளவு

பாதாம் - தேவையான அளவு

வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடான பின்னர், மாவை மெல்லிய தோசையாக எடுத்து வார்க்கவும். 

வெண்ணெயை அதன் மீது தடவவும். 

பின்னர், அதன் மீது சாக்லேட் சிரப்பை ஊற்றி லேசாக வேக வைக்கவும். 

அதில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் செர்ரி பழம் ஆகியவற்றை தூவி விடவும்.  

தோசையை திருப்பி போடாமல், அப்படியே ரோல் செய்து எடுக்கவும். 

பிறகு, சிறிய, சிறிய துண்டுகளாக கட் செய்து அதன் மேல் சாக்லேட் சிரப்பை ஊற்றி எடுத்தால் சுவையான சாக்லேட் தோசை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

preparation of choco dosa


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->