வேலைக்கு செல்பவரா?... கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு...!! - Seithipunal
Seithipunal


கர்ப்பகாலத்தில் பெண்கள், ஒவ்வொரு நொடி பொழுதையும் ரசித்து, மகிழ்ந்து, மனதையும், உடலையும் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

மேலும் அலுவலகத்துக்குச் சென்று வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அதனால் ஏற்படும் பயணக்களைப்பு, வேலையை முடிக்க வேண்டுமே என்ற பரபரப்பால் ஏற்படும் மனஅழுத்தம் என பல்வேறு பிரச்சனைகளால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. 

இதனால் தாயைவிட, வயிற்றில் உள்ள குழந்தைக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் கர்ப்பிணிகளுக்கு வயிற்றில் உள்ள குழந்தைக்கு போதிய ஆக்ஸிஜன், இரத்தம், சத்துக்கள் கிடைக்காமல் போகும். ஆனால், சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு செரிமான மண்டலம் மெதுவாகத்தான் இயங்குகிறது. குழந்தையின் வளர்ச்சியால் வயிறும் பெரிதாகிக்கொண்டே போகும். இதனால், ஒரே நேரத்தில் நன்றாகச் சாப்பிட முடியாது. ஆனால், இந்தத் தருணத்தில்தான் உடலுக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படும்.

எனவே, மூன்று வேளை என்பதை சிறிது சிறிதாகப் பிரித்து ஆறு வேளைகளாக சாப்பிட வேண்டும். சரியான நேரத்தில், போதுமான சத்தான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது, வயிற்றில் வளரும் குழந்தைக்கு வளர்ச்சி தரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

மேலும் வீட்டை விட்டுக் கிளம்பும்போது ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய் போன்ற சத்துள்ள பழங்களை நறுக்காமல், அலுவலகத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதேபோல் பழங்களைக் கடித்துச் சாப்பிடுவது மிகவும் நல்லதாகும். அப்படி இல்லையென்றால் பழச்சாறு செய்து அருந்தலாம். இதனால் உடலில் ஏற்படும் வறட்சி நீங்குவதுடன் வயிறும் நிறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnancy girls health tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->