பொங்கல் ஸ்பெஷல் பாரம்பரிய கூட்டுக் காய் குழம்பு... பற்றி தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

நாட்டுகாய்கள்: 

மொச்சை-
முருங்கைக்காய் -
கத்தரிக்காய் -
பரங்கிகாய்- 
பூசணிக்காய் - 
அவரைக்காய் - 
சேனைகிழங்கு- இது போல் எல்லாம் சேர்ந்து 300 கிராம்

வெங்காயம் - 2 
பூண்டு - 4
தக்காளி - 4
புளி - 1 எழுமிச்சை அளவு
தனியா தூள் - 2 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
கடுகு- 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு- தேவைக்கேற்ப

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து, பொறிந்ததும் சீரகம் சேர்த்து பொறிந்ததும் தோலுரித்த பூண்டு போட்டு வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சற்று வதங்கியதும் தக்காளி சேர்த்து வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் புளி தண்ணீர் , குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து கூட்டி கொதி வந்ததும் குக்கரை மூடி 1 விசில் விட்டு எடுத்தால் கூட்டுக்காய் குழம்பு ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal special mixed vegetables sambar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->