இன்றைய ஸ்பெஷல்..!! கரசாரமான மிளகு சிக்கன் குழம்பு..!! - Seithipunal
Seithipunal


அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றால் தனிபிரியம். பொதுவாக சிக்கன் குழம்பு வைப்பது போன்று இல்லாமல் சற்று வித்யாசமான முறையில் கரசாரமாக மிளகு குழம்பு செய்வது எப்படி என பார்போம்.

தேவையானவை:

சிக்கன்  - 1/2 கிலோ

மிளகு - 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வெங்காயம் - 1
வெண்ணெய் - 100 கிராம்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கறியை நன்கு சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் சிக்கனை வேகவைத்து கொள்ளவும் அதனுடன் கலந்துவைத்துள்ள மசாலாவையும், உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் மற்றொரு கடாயில் நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

பின்னர் வதக்கிய அனைத்தையும்  சிக்கனுடன் சேர்த்து கொதிக்கவிடவும். கடைசியாக மிளகு தூள்  கொத்தமல்லி சேர்த்து இறக்கின் பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pepper Chicken Kuzhambu Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->