இனி கடைகளில் வாங்க தேவையில்லை.. வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் டிக்கா..! - Seithipunal
Seithipunal


பன்னீரில் உடலுக்கு தேவையான பல ஊட்டசத்துக்கள் உள்ளன. ஹோட்டல்களில் பன்னீர் டிக்கா எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

பன்னீர் - 250 கிராம்

தயிர் - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2/ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்

சீரகத் தூள் - 1 ஸ்பூன்

சோம்பு - 1/2 ஸ்பூம்

எண்ணெய் - தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்

தனியா தூள் - 1/2 ஸ்பூன்

குடை மிளகாய் - 2 சதுரமாக நறுக்கியது

வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கியது

தக்காளி - 1 சதுரமாக நறுக்கியது

மூங்கில் குச்சி - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆயில், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து  கொள்ளவும்.

பின்பு கடலை மாவு சேர்த்து அதனுடன் சதுர வடிவில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை 1/2 மணி நேரம் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

பின்னர் இதனை மூங்கில் குச்சிகளில் ஒன்றின் பின் ஒன்றாக சொருகி தோசை கல்லை சூடாக்கி மூங்கில் குச்சிகளை வைத்து எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panner Tikka Recipe Tamil


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->