ரெஸ்டார்ன்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா.. இனி வீட்டிலேயே செய்யலாம்..! - Seithipunal
Seithipunal


பன்னீரில் கால்சியம் அதிகமாக உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பன்னீர் உணவுகள் செய்து கொடுக்கலாம். கடைகளில் வாங்காமல் சூப்பராக பன்னீர் டிக்கா எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

பன்னீர் - 250 கிராம்

தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
சீரகத் தூள் - 1 ஸ்பூன்
ஆலில் ஆயில் - - 1 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூம்
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - 1 1/2 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
குடை மிளகாய் - 2 சதுரமாக நறுக்கியது
வெங்காயம் - 1 சதுரமாக நறுக்கியது
தக்காளி - 1 சதுரமாக நறுக்கியது
மூங்கில் குச்சி - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பன்னீர், குடைமிளகாயை சதுர வடிவில் நறுக்கி கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது, சோம்பு, ஒரு ஸ்பூன் ஆலில் ஆயில், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதனுடன் கடலை மாவு சேர்த்து கலக்கி வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பன்னீர்  ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனை அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

பின்னர் இதனை சிறிய மூங்கில் குச்சிகளில் வெங்காயம், தக்காளி, பன்னீர் ஆகியவற்றை ஒன்றின் பின் ஒன்றாக குத்தி வைத்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல்லை வைத்து இந்த சிறிது எண்ணெய் விட்டு இந்த குச்சிகளை வேகவைத்து எடுக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panner Tikka Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->