காலை உணவாக இதனை செய்து கொடுங்கள்..பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பும் பாலக் கீரை ரெசிபி..! - Seithipunal
Seithipunal


காலையில் தோசை, இட்லி தான் பெரும்பாலானவர்களின் உணவாக இருக்கும். அவர்களுக்கு வித்யாசமாக அதே நேரத்தில் சத்து நிறைந்த பாலக் கீரை தோசை செய்து கொடுக்கலாம்.

தேவையானவை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி - தலா ஒரு கப்

உளுத்தம்பருப்பு - கால் கப்

பாலக் கீரை - ஒரு கப்

பச்சை மிளகாய் (விழுதாக அரைக்கவும்) - 3

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

எண்ணெய்,

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்தை ஊறவைத்து அதனை அரைத்து கொள்ளவும். பாலக்கீரையை ஆய்ந்து, சுடு தண்ணீரில் 5 நிமிடம் வேக வைத்து அரைத்துக்  கொள்ளவும். மாவுடன் அரைத்த பாலக் கீரை, சீரகம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மாவை கரைத்து கொள்ளவும்.

தோசைகல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palak Keerai Dosa For breakfast


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->