OFFICE  போகிற பெண்களே... அங்கு நிறைய பிரச்சனைகள் இருக்கா? - Seithipunal
Seithipunal


அக்காலத்தில், பெண்கள் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். ஆனால் தற்போது உள்ள பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

இன்றைய சூழலில் அவர்களுக்கு பாதுகாப்பு என்பது குறைவாகத்தான் இருக்கிறது. பெண்கள் தனியாக வெளியே செல்லும்போதும், அலுவலகத்தில் வேலை பார்க்கும்போதும், பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி தடுப்பது? அதற்கான வழிமுறைகள் என்ன? என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தவிர்க்கும் வழிமுறைகள் :

உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் அலுவலகத்தில் இருக்கும் மற்றவர்களிடம் பகிராதீர்கள். அவர்களிடம் அப்படி ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் குடும்பத்தில் நடக்கும் பாஸிட்டிவான விஷயங்களை சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு ஒரு மதிப்பு கிடைக்கும்.

நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஏதாவது இடர்ப்பாடுகள் இருந்தால் அதை முன்னதாகவே கணவரிடமோ அல்லது தந்தையிடமோ சொல்லிவிடுவது நல்லது.

வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லோரும் பர்சனல், அலுவலகம் என இரண்டு மொபைல்போன்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்யும் நேரத்தில் பர்சனல் மொபைலை மியூட்டில் வைத்துவிட்டு, வீடு திரும்பும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதேபோல் உங்களுடன் பணிபுரியும் தோழிகளை வீட்டிற்கு அழைத்து ஒரு விருந்து வைத்து நட்பை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த நட்பு அலுவலகங்களில் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்ளும் தைரியம் மற்றும் திறனைக் கொடுக்கும்.

வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு தேவையில்லாமல் யாரிடமும் பேசாதீர்கள். நீங்களாக சென்று யாருக்கும் ஆலோசனை சொல்லாதீர்கள். அமைதியாக தீர சிந்தித்து அதன்பின் எந்த பிரச்சனை இருந்தாலும் அதற்கு பதில் சொல்லுங்கள்.

அலுவலகத்தில் சக பணியாளரோ அல்லது உங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் யாராவது வேலை குறித்து குறை சொன்னால் அது உங்கள் வேலையை பற்றியது மட்டுமே, தனிப்பட்ட முறையில் உங்களை பற்றியது அல்ல என்பதை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் வேலை செய்யும்போது என்னதான் கோபம் வந்தாலும் அல்லது வெறுப்பு வந்தாலும் அதை மற்றவர்களிடம் காட்டாதீர்கள். அதற்கு மாறாக அவர்களை பார்த்து ஒரு புன்னகை செய்யுங்கள்.

வேலை செய்யும் இடத்தில் தனியாக இருப்பதை தவிர்த்து விட்டு, உங்களுடன் யாராவது ஒரு பெண் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உயர் பதவியில் இருந்தால் உங்களுக்கு கீழ் பணிபுரியும் நபர்களிடம் அன்பாகவும், கவனமாகவும் அதே சமயத்தில் கண்டிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

office girls problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->