இன்றைய ஸ்பெஷல்..!! அசைவ பிரியர்கள் விரும்பும் மூளை மசாலா..!! - Seithipunal
Seithipunal


அசைவ உணவு பிரியர்களின் விருப்ப பட்டியலில் தனி இடம் பிடித்திருப்பது ஆட்டு கறி. மட்டன் என்றால் பிடிக்காத அசைவ பிரியர்கள் குறைவு எனலாம். தற்போது ஆட்டு மூளையில் சுவையான மசாலா எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

ஆட்டு மூளை - 2

மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணய் - 3 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஆட்டு மூளையை நன்றாக கழுவி கொள்ளவேண்டும். பின்னர் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். பின்னர் கழுவிய மூளையை போதுமான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து நறுக்கி கொள்ளவும்.

பின்னர் அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.  பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் மசாலா கலந்த மூளையை சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும். சிவக்க வெந்தவுடன் அதில்  கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சூப்பரான மூளை மசாலா தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mutton Brain Fry Recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->