இன்றைய ஸ்பெஷல்..!! சுவையான முத்தியா குஜராத்தி..!! - Seithipunal
Seithipunal


தொடர் விடுமுறைகளால் குழந்தைகள் வீட்டில் இருப்பர். அவர்களுக்கு  சுவையான முத்தியா குஜராத்தி செய்து கொடுத்தால் அபர்கள் விரும்பி சாப்பிடுவர். அதை எப்படி செய்யலாம் என்பதை பார்போம்.

தேவையானவை:

முட்டைக்கோஸ்  -  250 கிராம்,

கடலைமாவு - 100 கிராம்,
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி,
ப.மிளகாய் - 3,
இஞ்சி - 1 துண்டு,
மஞ்சள் தூள் -  1/4 தேக்கரண்டி,
ஈனோ எனப்படும் புரூட் சால்ட் - 1/4 தேக்கரண்டி,
எலுமிச்சை சாறு - 1,
சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி.

தாளிக்க:
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை,
சீரகம் - 1/2 தேக்கரண்டி.

செய்முறை:

மிகவும் பொடியாகத் துருவிய கோஸ் உடன் உப்புக் கலந்து 20 நிமிடம் அப்படியே வைக்கவும். பின் கோஸை நன்றாக பிழிந்து தண்ணீரை வடித்து வைக்கவும். பின்னர் மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடலைமாவு மற்றும் ப.மிளகாய், உப்பு, இஞ்சி, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், பெருங்காயம் ஆகியவற்றை கோஸ் உடன் சேர்த்து, தேவையான நீர் சேர்த்து, மென்மையாக மாவு பிசையவும்.

உள்ளங்கையில் சிறிது தண்ணீரைத் தொட்டுக் கொண்டு, உருளை வடிவில் உருட்டி, 15, 20 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். இதனை ஆறவிட்டு நறுக்கி கொள்ளவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் தாளித்து ஆவியில் வேகவைத்த முத்தியாவுடன் சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். இதோ சுவையான குஜராத்தி முத்தியா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthiya Gujarati Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->