முஸ்லிம் ஸ்டைல் வெள்ளை குஷ்கா இப்படி செஞ்சு அசத்துங்க! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 4 கப்
தண்ணீர் - 8 கப்
வெங்காயம் - 4
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
தயிர் - 2 டேபில் ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 80 கிராம்
கொத்தமல்லி - 1 பிடி
புதினா இலைகள் - 1 பிடி
எழுமிச்சை பழம் - 1
உப்பு - தேவைக்கேற்ப
நெய் அல்லது எண்ணெய் - 100 மிலி

செய்முறை:

அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி நெய் உருகியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அவை பொறிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்தப் பின் தயிர் சேர்த்து கிளறி 40 கிராம் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக பச்சை மணம் போகும் வரை வதக்கவும். பின்பு பச்சை மிளகாய், கொத்தமல்லி புதினா இலைகளை சேர்த்து நன்றாக கிளறி விடவும் இலைகள் வதங்கியபின் அரிசி வேகும் அளவு  தண்ணீரை ஊற்றி மீதி உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தப் பின் அரிசி  உப்பு சேர்த்து எழுமிச்சை பழம் ஜூஸ் ஊற்றி குக்கரின் மூடியை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு உடனே மூடி திறக்காமல் தம்மில் விட்டு எடுத்தால் வெள்ளை குஷ்கா ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim style white khushka recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->