சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?! அதற்கான வழிமுறைகள்..!  - Seithipunal
Seithipunal


முல்தானிமட்டி என்பது சருமத்தை அழகுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். இது சருமத்தை சுத்தப்படுத்தவும், உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் உதவுகிறது.

இதில் உள்ள துத்தநாகம், சருமத்தில் பருக்களால் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.

முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளிப் போன்ற பிரச்சனைகளுக்கு முல்தானிமட்டியுடன் வேப்ப இலையின் விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும், வெண்புள்ளிகளும் நீங்கி சருமம் பொலிவடையும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முகத்தில் முல்தானிமட்டியை தடவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து, தண்ணீரில் கழுவினால் முகம் அழகாகவும், பளபளப்பாக இருக்கும்.

கோடைக்காலத்தில் முல்தானிமட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானிமட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசினால், எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.

முல்தானிமட்டியுடன் தயிர், க்ரீம், பன்னீர் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகள் போல் தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் தோலின் நிறத்தையும், அழகையும் பாதுகாக்கலாம்.

50 கிராம் பூலான்கிழங்கு, 50 கிராம் கஸ்தூரி மஞ்சள், 100 கிராம் கடலைப்பருப்பு, 100 கிராம் பயத்தம்பருப்பு, 100 கிராம் வெள்ளரி விதை, 25 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றைப் பொடியாக அரைத்து வைத்து தினந்தோறும் குளிக்கும் போது இதைப் பயன்படுத்துங்கள்.

முகத்தில் பருக்கள் மற்றும் அதிகமான எண்ணெய் சுரப்பு பிரச்சனை உள்ளவர்கள் பன்னீருடன், முல்தானிமட்டியைக் குழைத்து, ஒரு சிறிய பிரஷால் முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவினால் விரைவில் இப்பிரச்சனைகள் சரியாகும்.

வாரத்தில் இரண்டு நாட்கள், இந்தக் குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, 1 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து சருமம் பொலிவடையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

multani mitti for beauty tips


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->