வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள் :

வெண்டைக்காய் - 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 1,
மிளகு - 2 டீஸ்பூன்,
கடுகு - தாளிக்க.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
பூண்டு - 3 பல்,

செய்முறை விளக்கம்:

வெண்டைக்காயை நன்றாக கழுவி  பின்னர் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெண்டைக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

மிக்சியில் வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

வெண்டைக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.

மசாலாவுடன் சேர்த்து வெண்டைக்காய் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ladys finger fry recipe tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->