சுவையான வெண்டைக்காய் சாதம்.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் - 1 கப்,
வெண்டைக்காய் - 100 கிராம்,
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
கெட்டியான புளிக்கரைசல் - 1 டேபிள் ஸ்பூன்,
 கறிவேப்பிலை - சிறிது,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
மஞ்சள் தூள் -  அரை டீஸ்பூன், 
பட்டை - 2, 
கடுகு - 1  டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,

vendaikkai sadham, seithipunal

செய்முறை :

இரண்டாகப் பிளந்து வெண்டைக்காயை விதை வெளியே வந்துவிடாமல் லாவகமாக வகிர்ந்து வைக்கவும். பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், வெண்டைக்காயை போட்டு 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.

பின்னர், அதில் உப்பு, மஞ்சள் தூள், புளிக்கரைசல் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். லேசான குறைந்த அனலில் வைத்து,  வெண்டைக்காய் முழுவதும் மசாலா நன்றாக படிகிற படி வதக்கித் தனியே எடுத்து கொள்ளவும். 

பின்னர் மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, பட்டை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்துப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். பின்னர், இத்துடன் சாதம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, வெண்டைக்காய் மசாலாவையும் இத்துடன் சேர்த்துக் கிளறவும். 

லேசான அளவில் சாதம் மற்றும் மசாலா அனைத்தும் சேர்ந்து வருமாறு 5 நிமிடங்களுக்கு சேர்த்து பரிமாறவும். 

சுவையான வெண்டைக்காய் சாதம் தயார்.!! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ladies finger rice preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->