இதில் புளிதொக்கு செய்து இருக்கிறீர்களா? சாதத்துடன் அருமையான காம்போ..! - Seithipunal
Seithipunal


வெண்டைக்காயில் பொதுவாக பொரியல் அல்ல குழம்பு தான் செய்வோம். ஆனால், சற்று வித்யாசமாக வெண்டைகாயில் புளிகக்கறி எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

வெண்டைக்காய் - 200 கிராம்

உப்பு - தே.அ

எண்ணெய் - 2 tsp

மசாலா வறுத்து அரைக்க

தேங்காய்- 1 கப்

வெந்தயம் - 1 tsp

சீரகம் - 1 tsp

காய்ந்த மிளகாய்- 6

தனியா - 2 tsp

எள் - 2 tsp

அரிசி - 2tsp

பூண்டு - 4

மஞ்சள் பொடி - 1/4 tsp

வெல்லம் - 2 tsp

தண்ணீர் - 1/2 கப்

தாளிக்க :

எண்ணெய் - 1 tsp

கடுகு - 1/2 tsp

பெருங்காயத்தூள் - 1/4 tsp

காய்ந்த மிளகாய் - 2

கருவேப்பிலை - சிறிதளவு

 செய்முறை:

முதலில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டைக்காயை போட்டு வதக்குங்கள். அதில் உப்பு தூவிக்கொள்ளுங்கள்.  மசாலாவிற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை வறுத்து அரையுங்கள். அதனுடன் வெள்ளமும் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளுங்கள்.

கடாயில் வெண்டைக்காயை சேர்த்து அதில் அரைத்த பேஸ்டை ஊற்றிக்கொள்ளுங்கள். பின் ஊற வைத்த புளியை கரைத்து 1/2 கப் தண்ணீருடன் ஊற்றிக்கொள்ளுங்கள். கொதிக்கவிடுங்கள்.

பின்னர் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை சேர்த்து தாளித்து அதில் ஊற்றி கலந்துவிட்டால் வெண்டைக்காய் புளி கறி தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ladies Finger Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->