சிகிரெட்டிற்கு கணவர் டாட்டா காட்டுவதற்கு., மனைவியாக செய்ய வேண்டியது என்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்., தங்களின் மீது அன்பு வைத்திருக்கும் நபர்கள் புகைப்பழக்கத்தை வைத்திருந்தால்., நல்ல மனைவியாக புகைப்பழக்கத்தை கைவிடக்கூறி கூறுவது இயல்பான ஒன்று தான்.. இவ்வாறான ஆண்களுக்கு பெண்கள் சில விதிமுறைகளை கடைபிடிக்க கூறும் பட்சத்தில்., அவர்கள் புகையின் மீது வெறுப்படைந்து., புகை பழக்கத்தினை விட்டுவிடுவார்கள். 

smoking in front of kids, smoking,

எந்த தருணத்திலும் வீட்டில் புகை பிடிக்க அனுமதி செய்யாதீர்கள்.. இல்லங்களில் புகை பிடிப்பதால் துர்நாற்றம் ஏற்படும். இதனால் தினமும் சுத்தம் செய்ய வேண்டிய வேலை உள்ளது. இதனால் இல்லத்தில் புகை பிடிக்காதீர்கள் என்று கூறுங்கள். மேலும்., குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று கூறி., குழந்தைகளுக்கும் புகையினால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி புரிய வையுங்கள். 

புகைபிடித்து கொண்டு வந்து உங்களின் அன்பை காட்டி முத்தம் பெற முயற்சித்தால்., புகையிலை துர்நாற்றத்தை காரணம் காட்டி முத்தம் கொடுப்பதை நாசுக்காக கூறிவிட்டு ஒதுங்கினாலே., உங்களின் கணவர் புரிந்துகொண்டு புகைப்பழக்கத்தை குறைத்துக்கொள்வார்கள். புகையிலை பழக்கமானது எதிர்கால வயதை குறைத்துவிடும் என்றும், இளமையிலேயே உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளது என்றும் கூறுங்கள். 

family, husband wife love,

புகைப்பழக்கத்தால் ஏற்படும் உடலுறுப்பின் அழிவு மற்றும் நோய்களை கூறி அன்பால் உணர்த்துங்கள். சிறுசிறு செய்திகளை காண்பித்து அவர்களை உங்களின் அன்பினால் அவரை கட்டிபோடுங்கள். எதிர்காலம் குறித்த பயமே அவருக்கு நினைவில் வந்து., உங்களுக்காக மாறிவிடுவார். உங்களின் கணவர் எதற்காக புகை பிடிக்கிறார்? என்பதை அறிந்து., அவருக்கு அன்பை வெளிப்படுத்தி., அவரை மாற்ற முயற்சியுங்கள். 

நீங்கள் அன்பால் செய்யும் விஷயமே அவருக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் பட்சத்தில்., அவர் புகைப்பழக்கத்தை அறவே மறந்துவிடுவார். புதிய வகையான உணவுகளை சமைத்து வழங்கி., உங்களின் அன்பை அதிகளவு வழங்கி செயல்படுங்கள். உங்களது கணவரின் புகைப்பழக்கத்தை மறக்க என்னென்ன செய்கிறீர்கள்? எதற்காக செய்கிறீர்கள்? என்று அவர்களுக்கு புரிய வையுங்கள்.. 

family, husband wife love,

எந்த செயலையும் மாற்றுவது உங்களின் அன்பால் மட்டும் சாத்தியமே.... உங்களின் காதல்., அன்பு., பாசம். அரவணைப்பில் தான் எல்லாம் நிகழும்.. மாறாக கடுமையாக கண்டித்தால்., புகைப்பழக்கம் இரட்டிப்பாக தான் இருக்கும். எந்த ஞானியாக இருந்தாலும் ஒரு பழக்கத்தை கைவிட நாட்கள் அவகாசம் கட்டாயம் தேவைப்படும். இதனை புரிந்து சிறிது சிறிதாக உங்களின் கணவர்., புகைப்பழக்கத்தை கைவிட்டு வந்தால்., உங்களின் அன்பால் கட்டிபோடுங்கள்.. அன்பு - பாசம் - காதல் - முத்தம் இல்லறத்தின் அருமையான மகிழ்ச்சியை சேர்க்கும் விஷயங்கள் என்பதை மறவாதீர்கள்..  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

know hint to say good boy your husband smoking problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->