புரட்டாசி மாதம் சைவ உணவு: சுவையான காலிஃபிளவர் வடை.! செய்வது எப்படி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

கடலை மாவு - இரண்டு டீஸ்பூன்
காலிஃபிளவர் - ஒரு கப் 
கொத்தமல்லி - சிறிதளவு 
கசகசா - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப
பச்சை மிளகாய் - ஒன்று 

செய்முறை:

பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். காலிஃபிளவரை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்தபின்னர், அதில் நறுக்கி வைத்துள்ள காலிஃபிளவரை கொட்டி கொதிக்கவைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.

இன்னொரு கிண்ணத்தில் காலிஃபிளவர், கடலை மாவு, கசகசா, மிளகாய் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து எடுத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு அதில் சிறு சிறு உருண்டைகளாக காலிஃபிளவர் மசாலாவை எடுத்து வடை போல தட்டி, பொரித்து எடுத்தால், சுவையான காலிஃபிளவர் வடை தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaliflower vada


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->