கச்சோரியை இனி வீட்டிலேயே செய்யலாம்..!! - Seithipunal
Seithipunal


கச்சோரிகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவோம் சுவையான கச்சோரியை வீட்டில் எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்,

உப்பு - 1/2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
பட்டாணி - 1 1/2 கப்,
பச்சைமிளகாய் - 3,
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித் தூள் - 1 டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், உ
உப்பு - தேவைக்கு,
நறுக்கிய கொத்தமல்லி - 1 டீஸ்பூன்

செய்முறை:

மைதாவுடம் பேக்கிங்க் சோடா உப்பு சேர்ந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்க்காமல் இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் பட்டாணி அனைத்தையும் கொரகொரப்பாக அரைக்கவும்.

தனியா, சீரகம் மற்றும் பெருஞ்சீரகம் அனைத்தையும் தனியாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் சேர்த்து அரைத்த பட்டாணி கலவை சேர்க்கவும். பிறகு மிளகாய்தூள், மல்லித்தூள், ஆம்சூர்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இறுதியாக அரைத்த மசாலாவைத் தூவவும், கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இந்த கலவையை பூரி போல் செய்த மைதாவில் வைத்து அதனை மீண்டும் மடித்து எண்ணெயில் இட்டு பொரித்தெடுக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kachori Mutter recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->