பெண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும் இரும்புசத்து.! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு ஆண்களை விட இரும்புசத்து அதிகளவு தேவைப்படுகிறது. உடலுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்யும் செயலில் இரும்புசத்து முக்கிய பங்கு வகித்து வருகிறது. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் இரத்தப்போக்கை ஈடு செய்வதற்கு இரும்புசத்து பெண்களுக்கு அவசியமாகிறது.  உடலில் உள்ள இரும்புசத்தில் 70 விழுக்காடு ஹீமோகுளோபினின் இரத்த சிவப்பணு மற்றும் மியோகுளோபினின் தசை செல்களிலும் காணப்படுகிறது. இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை நுரையீரல் மூலமாக பிற திசுக்களுக்கு எடுத்துச்செல்ல ஹீமோகுளோபின் அவசியமானதாகும்.

இரும்புசத்து குறைபாட்டால் ஹீமோகுளோபின் செயல்பாடுகள் பாதிப்பிற்கு உள்ளாகி, இரத்தசோகை பிரச்சனையை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. உடலின் சோர்வு, தலைசுற்றுவது, மூச்சுத்திணறல், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தலைவலி, கூந்தல் வறட்சி, கால்களில் நடுக்கம், பதற்றம், நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை இரும்புசத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. முடி உதிர்வது மற்றும் சருமம் வெளிர் நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்சனையும் ஏற்படும்.

பெண்களில் தாய்மை அடையும் பெண்கள் இரும்பு சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டால், மேற்கூறிய பல பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடும். ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய தேவையான இரும்புசத்து இல்லாத பட்சத்தில், இரத்தசோகை பிரச்சனை ஏற்படும். சருமத்தில் வறட்சி, அரிப்பு, வெளிர் மஞ்சள் நிறத்திற்கு உடல் மாறுதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மேலும், நகங்கள் உடைதல், வெடித்தல், உடல் வலுவிழப்பு, உடல் சோர்வு, கருவளையம் போன்ற பிரச்சனையும் ஏற்படும். இரும்புசத்து வழங்கும் நட்ஸ் வகைகள், பயறு வகைகள், பீன்ஸ், கீரைகள், சிறு தானியங்கள் போன்றவற்றை பெண்கள் சாப்பிட வேண்டும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iron Mineral Use Woman Health Status Good Health Tips Tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->