சம்மர் ஸ்பெஷல் : சில்லுனு தர்பூசணி பழ ஜூஸ் செய்யலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


கோடை வந்துவிட்டாலே வெயில் அதிகமாகத்தான் இருக்கும். அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்? எந்த பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது மற்றும் குழந்தைகளுக்கு எப்படி சத்துள்ள பழங்களை தருவது? என்பதை இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்.

கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். எனவே, இக்காலங்களில் நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.

தர்பூசணி வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதைப் பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிடலாம்.

தேவையானப் பொருட்கள் :

தர்பூசணி துண்டுகள் - 4
சர்க்கரை - சிறிது
உப்பு - அரை சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - 6 

செய்முறை :

தர்பூசணி துண்டுகளை எடுத்து கழுவி, அதிலுள்ள கொட்டைகளை நீக்கவும்.

பின்பு, மிக்ஸியில் ஐஸ் கட்டிகள், மிளகு தூள், சர்க்கரை, உப்பு, பழம் ஆகிய அனைத்தையும் போட்டு நன்கு அடிக்கவும்.

பின்பு, வடிகட்டியில் வடிகட்டினால் சுவையான தர்பூசணி பழச்சாறு தயார்.

அனைவரும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியில்லாமலும் வைத்துக்கொள்ள முயற்சிப்போம். அதற்காக தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நிறைய பழங்களையும் வாங்கி சாப்பிடுவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare water melon juice in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->