கசப்பு இல்லாத சுவையான வேப்பம்பூ வடை.. செய்வது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள் :

கடலைப் பருப்பு - 1 கப்

வெங்காயம் - 1

காய்ந்த மிளகாய் -2

பூண்டு பற்கள் - 10

இஞ்சி -சிறிய துண்டு

சோம்பு - ஒரு தே.கரண்டி 

புளி - சிறிதளவு

வெல்லம் - ஒரு துண்டு

வேப்பம்பூ - கால் கப்

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்யும் முறை :-

கடலைப்பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் அதனை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் போட்டு அதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, வேப்பம்பூ, வெல்லம், புளி, உப்பு சேர்த்து வடை பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான வேப்பம்பூ வடை தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare Veppampoo vada


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->