மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யும் வெந்தயக்கீரை சூப்..!! - Seithipunal
Seithipunal


பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் இயற்கையான உடல் வலிகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில், வீட்டில் ஓய்வு எடுப்பது அவர்களின் உடல் நலத்திற்கு நல்லது. அந்த வகையில், மாதவிடாய் நேரத்தில் நல்ல தோழனாக இருக்கும் வெந்தயக்கீரை சூப் செய்வது எப்படி என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 1 கப்,
பெரிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
சோள மாவு - 1 ஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - சிறிதளவு,


காய்ச்சிய பால் - 1/2 டம்ளர்,
மிளகுப்பொடி, உப்பு - தேவையான அளவு...

வெந்தயக்கீரை சூப் செய்முறை:

வெந்தயக்கீரை மற்றும் வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய்யை விட்டு வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வேகவைத்து, நன்கு கொதித்த பின்னர் வெந்தயக்கீரை மற்றும் பூண்டை சேர்க்க வேண்டும். 

இவை அணைத்து நன்றாக கொதித்தவுடன் காய்ச்சிய பாலில் சோளமாவினை கரைத்து, இந்த சூப்புடன் சேர்க்க வேண்டும். பின்னர் உப்பு மற்றும் மிளகு போடி தேவையான அளவு போட்டு கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மற்றும் சத்தான வெந்தயக்கீரை சூப் தயார்.

மருத்துவ பயன்கள்: 

வெந்தயக்கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி போன்ற உயிர்சத்துக்கள் மூலமாக உடலின் எலும்பு பகுதிகள் உறுதியாகும். இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனை சரியாகும். மந்தநிலை சரியாகும். அஜீரண பிரச்சனை சரியாகும்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to Prepare Vendhayakeerai soup


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->