கிராமத்து ஸ்டைலில் சுவையான கருவாட்டு பிரியாணி.! செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


வித்தியாசமான முறையில் சுவையான கருவாட்டை கொண்டு பிரியாணி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - அரை கிலோ
வெங்காயம் - அரை கிலோ
வஞ்சிரம் கருவாடு - அரை கிலோ
பழுத்த சிவந்த பச்சை மிளகாய் - ஆறு
பழுத்த தக்காளி - அரை கிலோ
தயிர் - ஒரு கோப்பை
காஷ்மீரி சில்லி - இரண்டு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை - ஒரு கொத்து
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
புதினா - ஒரு கொத்து
உப்பு தூள் - தேவையான அளவு
பிரியாணி இலை - இரண்டு
நெய் - 50 மில்லி
எண்ணெய் - 200 மில்லி
எலுமிச்சை - அரை பழம்

செய்முறை :

லேசாக அரிசியை களைந்த்து கொள்ளவும். 

நன்றாக கருவாட்டை கழுவி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரம் ஒன்றில், கருவாடு பொரித்த எண்ணெய், நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து  வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் வதக்கிய பின்னர், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள் மற்றும் பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் புதினா, கொத்தமல்லி, தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி கொண்டே தயிரை சேர்க்கவும். அடுத்து உப்பு, வறுத்த கருவாட்டை போட்டு வேக விடவும். பின்னர், ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.

தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிட்டு கடைசியாக சிறிது நெய், கொத்தமல்லி, லெமன் பிழிந்து, பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.

பிறகு லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விடவும். சுவையான கருவாட்டு பிரியாணி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare tasty village karuvadu briyani 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->